Powered by Blogger.

காதல் சிக்கலில்: மனக்கவலையில் யுவதி தூக்கிட்டு தற்கொலை!

Written By piramyd on Tuesday, October 23, 2012 | 8:50 PM


மதவாச்சி - ரயில்நகர் பகுதியில் யுவதியொருவர் தனது வீ்ட்டு வரவேற்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இனோக்கா பியரத்ன என்ற 22 வயதுடைய யுவதியே நேற்று (23) மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மதவாச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கென அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். காதல் பிரச்சினையால் ஏற்பட்ட மனக்கஷ்டத்தால் குறித்த யுவதி தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8:50 PM | 0 comments | Read More

நீக்கியதில் வருத்தமில்லை; நானே விலகிவிட இருந்தேன்... நித்யானந்தா.

Written By piramyd on Friday, October 19, 2012 | 10:28 PM


திருவண்ணாமலை: மதுரை இளைய ஆதீனத்தின் பொறுப்பில் இருந்து என்னை அருணகிரிநாதர் நீக்கியதால் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்று நித்யானந்தா கூறினார்.

நித்தியானந்தா நீக்கப்பட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்ததைத் தொடர்ந்து, திருவண்ணாமலை திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருக்கும் நித்தியானந்தாவிடம் கருத்து கேட்க நிருபர்கள் சென்றனர். ஆனால், அவர் தற்போது செய்தியாளர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்று அவரது சீடர்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில் தனது ஆசிரமத்தில் நடந்த நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவில் திடீரென நிருபர்களை சந்தித்தார் நித்தியானந்தா. அவர் கூறுகையில்,

இந்த நிலையில் திருவண்ணாமலையில் தனது ஆசிரமத்தில் நடந்த நவராத்திரி விழாவில் நித்தியானந்தா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து என்னை நீக்கிவிட்டனர் என்ற தகவல் நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். இதனால் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை. இரண்டொரு நாளில் நானே விலகிவிடலாம் என்று தான் முடிவெடுத்து இருந்தேன்.

இந்த பதவியை நான் கேட்டு பெறவில்லை. மதுரை ஆதீனம், அவராகவே கொடுத்தார். அவருக்கு சங்கடம் ஏற்படும் சூழ்நிலையில் நானே விலகி கொள்வதாக கூறி இருந்தேன். இது ஒரு பொறுப்புதான். இந்த பொறுப்பு தானாக வந்தது. இப்போது போய் விட்டது.

ஆதீனத்தின் மீதான அன்பு, பக்தி, மரியாதை என்றும் எனக்கு உள்ளது. அதே மாதிரி என் மீதான அன்பும், மரியாதையும் ஆதீனத்திடம் உள்ளது என்றார்.

கேள்வி: உங்களது ஆதரவாளர்களால் மதுரை ஆதீனம் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறி உள்ளாரே?

நித்தி: இதுபோன்ற கற்பனையான கேள்விக்கு பதில் கூறமுடியாது. என்ன புகார் கொடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் அவருக்கு எந்தவித மன உளைச்சலும், பாதிப்பும் ஏற்படாது என்பது மட்டும் உறுதி.

கேள்வி: உங்கள் நீக்கத்துக்கான காரணம் என்ன?

நித்தி: என்னால் ஏதும் சங்கடம் ஏற்படுமேயானால் நானே விலகி விடுகிறேன் என்று ஏற்கெனவே நான் மதுரை ஆதீனத்திடம் கூறியிருந்தேன். மதுரை ஆதீனம் கையெழுத்து போட்டால் டிஸ்மிஸ், நான் கையெழுத்து போட்டால் ராஜினாமா. இது வெறும் நடைமுறைதான்.

கேள்வி: உங்கள் உடைமைகளை எடுக்க மதுரைக்கு போவீர்களா?

நித்தி: அப்படி ஒரு சூழ்நிலை வராது. மதுரை ஆதீனத்தில் இருந்த என்னுடைய சீடர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டுள்ளனர்.

கேள்வி: பதவி நீக்கத்தால் உங்களுக்கு ஏதேனும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதா?

நித்தி: திருஞானசம்பந்தர் மீதும், மதுரை மீனாட்சி அம்மன் மீதும் எனக்கிருந்த பக்தியால் நான் செய்த பணிகளை சிறு, சிறு சேவையாகக் கருதுகிறேன். இதனால் என்னை நீக்கியதால் எனக்கு எந்த பொருளாதார இழப்பும் என்றார்.

கேள்வி: இனி நித்யானந்தா தியான பீடம் எங்கு தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்?

நித்தி: நான் எனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன். நான் எங்கிருக்கிறேனோ அங்கு தலைமையிடமாகக் கொண்டு நித்யானந்தா தியான பீடம் செயல்படும்.
10:28 PM | 0 comments | Read More

டக்ளஸ் ஆஜராகித்தான் ஆக வேண்டும்- பிடிவாரண்ட் ரத்து கிடையாது: சென்னை கோர்ட் அதிரடி!


சென்னை: சென்னை இளைஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.

வழக்கு என்ன?

தமிழகத்தில் 1980களில் இலங்கை போராளிகள் அமைப்பினர் சுதந்திரமாக நடமாடி வந்தனர். அப்போது தகராறு ஒன்றில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று சென்னை சூளைமேட்டில் அப்பாவியான திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரை சுட்டது டக்ளஸ் தேவானந்தா என்பதால் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டக்ளஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகினர்.

பிடிவாரண்ட்- தேடப்படும் குற்றவாளி:-

இந்த நிலையில் அரசியல் மாற்றங்களால் டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்குப் போய்விட்டார். ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. இதனால் 1990-ம் ஆண்டு சென்னை அமர்வு நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. அத்துடன் 1994-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டார்.

மீண்டும் சூடுபிடித்த வழக்கு:-

இதனிடையே தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டக்ளஸ் கோரியிருந்தார்.

மனு தள்ளுபடி:-

இம்மனு மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவர் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஆகவே, அவர் இந்த நீதிமன்றத்தில் முதலில் ஆஜராக வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழலில் பிடியாணையை ரத்து செய்து, தன்னிடம் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறினார்.
10:25 PM | 0 comments | Read More

மின் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிக்குமா?

Written By piramyd on Tuesday, October 16, 2012 | 4:17 AM


மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என பொதுசன பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் கட்டண உயர்வு குறித்து இலங்கை மின்சார சபை எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என பொதுசன பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார்.

வரவு - செலவுத் திட்டத்திற்கு முன்னர் அரசாங்கம் மின் மற்றும் எரிபொருள் கட்டணங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கவும் எவ்வித திட்டமும் இல்லை என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்தார்.

எனினும் உலக வங்கியில் மசகெண்ணையின் விலை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
4:17 AM | 0 comments | Read More

மோட்டார் சைக்கிள் முகத்துக்கு முகம் மோதி விபத்து: ஒருவர் பலி மூவர் படுகாயம்.


சிலாபம் - புத்தளம் வீதியில் ஜயபிம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (15) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
4:01 AM | 0 comments | Read More

நான் ரெடி நீங்க ரெடியா? சமீரா.


படங்களில் குத்துப் பாடலுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது என்று நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

தமிழில் கௌதம் இயக்கத்தில் உருவான வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இவர் தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் உருவாகும் பிரகாஷ் ஜா இயக்கத்தில் சக்ரவியூக் என்ற படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் சமீரா.

இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப் பாடல்களுக்கு ஆடுவது பெருமையான ஒன்றாக மாறியுள்ளது.

குத்துப்பாடலுக்கு ஆடினார் தனி கெளரவம் கிடைக்கிறது. உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது என்றார். எனவே குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

ஒரு படத்தில் குத்துப் பாடல் இருக்கிறதா என்று மக்களே கேட்கும் அளவுக்கு தற்போது நிலைமை மாறியுள்ளது வரவேற்புக்குரியது.

மேலும் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி குத்துப்பாடல்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி.





3:46 AM | 0 comments | Read More

மத்தல விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறக்கம்.


ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இன்று (16) முதலாவது பரீட்சாத்த விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
3:35 AM | 0 comments | Read More

1 நிமிடம் ஓடும் வீடியோவில் ஒவ்வொரு உறுப்பாகக் காட்டிய 19 வயது நடிகை.


little Jenny Humphrey எனும் பெண்களுக்கான நாடகத் தொடரில் நடித்து பல கிசுகிசுக்களை தன்னகத்தே வைத்திருக்கும் 19 வயதான நடிகை Taylor Momsen புதிய விளம்பர வீடியோவோன்றில் முழுவதும் நிர்வாணமாகக் காட்டி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

1 நிமிடம் நகரும் இந்த வீடியோவில் ஒவ்வொரு பாகங்களையும் காட்டியுள்ளார் அடுத்ததாக அதுவருமோ என எதிர்பார்க்கும் தருணத்தில் முழுவதும் காட்டி விடுகிறார்.

மை பூசப்பட்ட கண்கள், விரித்துவிடப்பட்ட கூந்தல் இப்படியே ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கூறிக் கொண்டே போகலாம், சொல்வதை விட பார்ப்பதில் கொஞ்சம் பலன் அதிகம், பார்த்து தெரிந்து கொள்ளலாமே.

3:24 AM | 0 comments | Read More

அவிசாவளையில் ஒல்லாந்தர் காலத்து புராதன பொருட்கள் மீட்பு.


சீதாவாக்கை ராஜதானிக்குரிய அவிசாவளையில் பல புராதன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.அவிசாவளை மாரியங்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை ஒல்லாந்தர் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒல்லாந்தர்கள் பயன்படுத்திய நாணயங்கள், பாத்திரங்கள் போன்றன இவ்வாறு மீட்கக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சீத்தாவாக்கை ராஜதானிக்கு சொந்தமான மேலும் பல விபரங்கள் வெளிக் கொணரப்படும் என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
3:16 AM | 0 comments | Read More

தங்க பாலியல் உபகரணம்.

Written By piramyd on Monday, October 15, 2012 | 11:59 PM


5 வகையான உணர்வுகளுடன்; பெண்கள் மட்டுமே விரும்பும் உலகில் மிகவும் பெறுமதி வாய்ந்த தங்க பாலியல் உபகரணமொன்றை நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது. 24 கரட் தங்கத்திலேயே இந்த உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.

சார்ஜ் மற்றும் கைநூலுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தின் மூலம் தொடர்ந்து 4 மணித்தியாலங்கள் இன்பத்தை அனுபவிக்கலாம் என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.

24 கெரட் தங்க தகட்டினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேற்படி பாலியல் உபகரணத்தின் இலங்கை பெறுமதி 18 இலட்சத்து 93,130 ரூபாவாகும்.

இந்த தங்க பாலியல் உபகரணத்தினை தங்க ஆபரணங்களை வைக்கும் பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாமென மேற்படி பாலியல் உபகரணத்தை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அரிய உற்பத்தியில் 5 வகையான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அதிர்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பலகையினால் வடிவமைக்கப்பட்ட சொகுசான பெட்டியொன்றில் அடைக்கப்பட்ட நிலையில் வெளிவந்துள்ள இந்த உபகரணத்தை பெண்கள் அதிகமாக விரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
11:59 PM | 0 comments | Read More